காட்டுப் பங்களாவுக்குப் போகும் ஞானேந்திரா!

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து, நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரண்மனையை விட்டு வெளியேறுமாறும் மன்னர் ஞானேந்திராவுக்கு மாவோயிஸ்ட்கள் கெடு விதித்தனர்.
கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து அரண்மனையை விட்டு வெளியேற ஞானேந்திரா முடிவு செய்தார். அதன் படி இன்று மாலை பாரம்பரியம் மிக்க நாராயன்ஹிதி அரண்மனையை காலி செய்கிறார்.
அங்கிருந்து வனப் பகுதியில் உள்ள நாகார்ஜூனா மாளிகைக்கு அவர் செல்கிறார். அங்கு குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
இந்த மாளிகையும் கிட்டத்தட்ட ஒரு அரண்மனையைப் போன்றே உள்ளது. மொத்தம் பத்து கட்டடங்கள் இதன் வளாகத்தில் உள்ளது. அதில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு ஆகியவை உள்ளன.
தலைநகர் காத்மாண்டுவுக்கு வெளியே இயற்கை எழில் கொஞ்சும் வனப் பகுதியில் இந்த பங்களா உள்ளது.
அரண்மனையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, மாலை 5 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஞானேந்திரா. அப்போது தனது தரப்பு நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கவுள்ளார்.
ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறுவதை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா, பிரதமர் கொய்ராலாவை இன்றுகாலை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நேபாள ராணுவத் தலைமைத் தளபதி ரூக்மாங்கத் கத்வால், நேபாள போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஞானேந்திரா குடியேறவுள்ள புதிய பங்களாவின் பாதுகாப்பு நிலை, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications