'அவர்கள் உளறலுக்குக் காரணம் என்ன?'-கருணாநிதி
சென்னை: கொள்ளையர்களை போலீசார் கைது செய்தால் அதைப் பாராட்டாமல்
சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக தூற்றித் திரிகின்றனர்.
உண்மையில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ
'ஊற்றிக் கொடுத்த' ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா? என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கவிதை வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகப் போலீசார் ஒரு கொள்ளையை தடுத்தது மட்டுமல்லாமல்;
கொள்ளையர் நால்வரைக் கூண்டோடு கைது செய்தனர் என்றும்
துப்பாக்கிக் குண்டுகளைத் துப்பறியும் போலீசார்;
துருப்பிடித்த நிலையில் தோண்டியெடுத்தனர் என்றும்
ஏடுகளில் செய்திகள் வந்தால் போதும்;
நாடு காடாகி விட்டதென்றும்-
நாள்தோறும் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறதென்றும்
தேன் போலக் கொட்டித் தீர்க்கின்றார்; தேசப்பற்று மிக்கவர் போல!
பொல்லாத் திருடர்களை போக்கிலிகளின் கூட்டத்தாரை
போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்றால்; அவர்களைப்
போற்றிப் புகழ்தலன்றி கழக ஆட்சியை
தூற்றித் திரிகின்றார் எனும்போது
உண்மையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ;
ஊற்றிக் கொடுத்த ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா?
காலிகளை, கயவர்களை, காவல்துறை கைது செய்து தண்டித்தால்
கை கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்காமல்-
கண்டனக் குரல் எழுப்பிச் சட்டம் ஒழுங்கு
கண்டபடி கெட்டு விட்டதென்று சாற்றுவது;
அரசியல் அசூயை அன்றி
அறிவுடையார் செயலல்லவே!
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications