ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு: நிரந்தர ஊழியர்களும் ஸ்டிரைக் செய்ய முடிவு

என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சந்தோஷ் பொகார்டியா முன்னிைலயில் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களுக்கான இரு அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தாங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவிருப்பதாக நிரந்தர தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால் என்.எல்.சியில் மின் உற்பத்தி சுத்தமாக நின்று போகும் நிலை ஏற்படும்.
இதற்கிடையே, நாளை ஒப்பந்த ஊழியர்கள்,தங்களதுகுடும்பத்தினருடன் நாளை என்.எல்.சியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால், என்.எல்.சி. வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications