டி.எஸ்.பி என்று கூறி கிருஷ்ணசாமி மனைவிக்கு மிரட்டல் - 2 பேர் கைது
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவியை அணுகிய இருவர்,டி.எஸ்.பி. என்று கூறி பணம் கேட்டுமிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மதுரை அருகே கிருஷ்ணசாமி தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து மயிலாப்பூர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு மதியம் 2 மணிவாக்கில் கிருஷ்ணசாமி வீட்டுக்கு இருவர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாப்புக்கு இருந்தபோலீஸார் தடுத்து விசாரித்தபோது, தங்களை டி.எஸ்.பி. என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்புப் போலீஸார் உள்ளே அனுமதித்தனர். வீட்டுக்குள் நுழைந்த இருவரும், கிருஷ்ணசாமியின் மனைவி சித்ராவிடம், நாங்கள் டி.எஸ்.பி, தலைவரைப் பார்த்துப் பணம் கேட்க வந்தோம். பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இருவரும் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த சித்ரா, அவர்களை வெளியே போகுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் பணம் கொடுத்தால்தான் போவோம் என்று சித்ராவை மிரட்டியுள்ளனர்.
இதைப் பார்த்த பாதுகாப்புப் போலீஸார் விரைந்து வந்து இருவரையும் பிடித்தனர். சித்ராவின் மகன் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து உதவி ஆணையர் ஐசக் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் ஆகியோர் விரைந்து வந்தனர்.
இருவரையும் பிடித்து விசாரித்ததில், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் என்பதும், இருவரும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
மருத்துவச் செலவுக்காக காங்கிரஸ் எம்.பி. ஜெயந்தி நடராஜனை சந்தித்து பணம் கேட்க வந்ததாக போலீஸில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications