தமிழக அரசியலில் விரைவில் பெரும் மாற்றம்-கனிமொழி
கடலூர்: திமுக மகளிர் மாநாட்டுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
கடலூரில் இன்று திமுக மகளிர் அணி மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு வந்திருந்த கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்பட பல்வேறு சாதனைகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறது. இதனை பெண்கள் மத்தியில் எடுத்து சொல்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து பெண்களுக்காக திமுக பாடுபட உறுதிமொழி எடுத்து கொள்ளும்.
தமிழகத்தின் பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படும்.
திமுக மாநாடுகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாநாடும் பெண்கள் பெருமளவில் அரசியலில் பங்கேற்கும் வகையில் ஒரு பெரிய மாற்றத்தை, விளைவை ஏற்படுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications