திடீரென எரிந்த மாருதி வேன்-ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
சென்னை: சென்னை பரங்கிமலையில் மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த துரைராஜ் (56), அவரது மனைவி அமுதவல்லி, மகன் அருண், அக்கா எழிலராசி (60), உறவினர் அரசு (83) ஆகியோர் மாருதி ஆம்னி வேனில் சென்றனர்.
டிரைவர் கண்ணன் அதை ஓட்டிச்சென்றார். நேற்று இரவு 9 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு கண்டோன்மெண்ட் ராணுவ குடியிருப்பு அருகே வேன் வந்த போது, அதில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
அடுத்த வினாடியே காரில் தீப்பிடிக்கத்துக் கொண்டு தீ கார் முழுவதும் பரவியது. செய்வதறியாமல் தவித்த டிரைவர் காரை எதிரே இருந்த சுவற்றில் மோதினார்.
காரில் இருந்தவர்கள் வெளியே குதிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீப் பிடித்துக் கொண்டதால் இறங்கக் கூட முடியவில்லை,
இதைப் பார்த்த பொது மக்கள் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்தனர். ஆனால், முழுமையாக தீயி்ல் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் காரிலேயே எரிந்து சாம்பலானார்.
துரைராஜ், அருண், எழிலரசி, டிரைவர் கண்ணன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் துரைராஜின் மனைவி அமுதவல்லி காயமின்றி தப்பிவிட்டார்.
மாருதி ஆம்னி வேன்கள் தீப் பிடித்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications