காவல் நிலையத்தில் அத்துமீறிய மாஜிஸ்திரேட்!-விசாரணைக்கு உத்தரவு!!
மதுரை: காவல் நிலையத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட நீதிமன்ற ஊழியரை விடுவித்துச் சென்ற மாஜிஸ்திரேட் மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியிடம், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிபதிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து கடந்த 7 ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது சொக்கிகுளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்குவது தொடர்பாக பங்க் ஊழியர்களுக்கும், நீதிமன்ற ஊழியர் நாகேந்திரன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த துணை ஆணையர் பிரபாகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று நாகேந்திரனை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாகேந்திரனை போலீஸார் அழைத்துச் சென்றது குறித்து நீதிமன்ற ஊழியர்கள், மதுரை குற்றவியல் 5 வது மாஜிஸ்திரேட் சாய் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டுகள் இளங்கோவன், சாய்சரவணன் ஆகியோர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, மாஜிஸ்திரேட் இளங்கோவன், நாகேந்திரனை ஜாமினில் விடுமாறு வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீஸார் அவரை ஜாமினில் விட மறுத்துள்ளனர்.பின்னர் நாகேந்திரனிடம் எழுதி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் துணை கமிஷினர் பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் மதுரை காவல்துறை ஆணையர் நந்தபாலனிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டின் செயல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலிக்கு புகார் அனுப்பினார் நந்தகோபாலன்.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து முழுமையாக விசாரித்து அளிக்குமாறு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications