மாஜிஸ்திரேட் மீது கல்வீச்சு-டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மாஜிஸ்திரேட் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் குறித்து டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடந்த 23.05.08 அன்று அக்பர்அலி என்பவரது உறவினர் பாத்திமாவை சிலர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அப் பெண்ணை மீட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனை ஏற்க மறுத்து அங்கிருந்த பாத்திமாவின் உறவினர்கள் சிலர் மாஜிஸ்திரேட் மீது சரமாரியாக கற்களை வீசியுள்ளனர்.
இந்த சம்பம் குறித்து காவல் நிலையத்தில் வக்கீல் சங்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் சங்க தலைவர் செல்லதுரை மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மாஜிஸ்திரேட் மீது சரமாரியாக கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜோதிமணி இது தொடர்பாக டிஜிபி, ராமநாதபுரம் டிஐஜி, சிவகங்கை எஸ்பி, இளையான்குடி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications