ஜெயலலிதாவுடன் ராமசாமி படையாச்சி மகன் சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மறைந்த ராமசாமி படையாச்சியின் மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் கொடநாடு எஸ்டேட்டில் சந்தித்துப் பேசினார்.
வன்னியர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் ராமசாமி படையாச்சி. வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் உண்டு. டாக்டர் ராமதாஸுக்கு முன்பாக வன்னியர்களின் தனிப் பெரும் தலைவராக திகழ்ந்தவர் படையாச்சி.
ராமசாமி படையாச்சியின் மகன் எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார். இவருடைய மகன் ராம்பிரசாத்துக்கும், விருகம்பாக்கம் வி.ஜி. பஞ்சாட்சரத்தின் மகள் மாலினிக்கும் வருகிற 22ந் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
திமுக அணியிலிருந்து பாமக விலக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக அணியில் பாமக இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் ராமசாமி படையாச்சியின் மகன் ஜெயலலிதாவை சந்தித்துள்ளது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே பாமக தலைவர் ஜி.கே.மணி மகனுக்கும், திருவள்ளூர் மாவட்ட அதிமுக பிரமுகரின் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தத் திருமணத்தில் டாக்டர் ராமதாஸும், ஜெயலலிதாவும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications