திருவிழாவில் மோதல்: பஸ், லாரி உடைப்பு-போலீஸ் குவிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஒரு கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பஸ்கள், 2 லாரிகள் உடைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியில் பகவதி அம்மன், காளியம்மன், முனியப்பன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு முளைப்பாரி ஊர்வலம் ஜின்னா நகர் வழியாக சென்றது.
இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பூச்சிநாயக்கன் பட்டி மக்கள் சாலை மறியல் நடத்தினர்.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை என கூறப்படுறது.
இந்த நிலையில் மதுரையில் இருந்து பேகம்பூர் வழியாக வந்த 4 பஸ், 2 லாரிகளை மர்ம கும்பல் அடித்து உடைத்தது.
இதில் அரசு பஸ் டிரைவர் துரைசாமி, கண்டக்டர் மல்லையா உள்பட பஸ்ஸில் பயணம் செய்த பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கலவரம் பரவாமல்தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications