இந்திய எல்லைக்குள் 28 சிங்கள மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கைது செய்த்து.
இந்திய கடலோர காவல் படை கப்பல் சாகர் வழக்கம் போல் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 65 கடல் மைல் தொலைவில் சில படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.
உடனே அவற்றின் அருகில் சென்று காவல் படையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது அவை இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இடம் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் படகுகளைச் சுற்றி வளைத்தனர். காவல்படை டிஐஜி ரகுவன்சி தலைமையிலான அதிகாரிகள், அந்த 6 படகுகளில் இருந்த 28 சிங்கள மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களை அந்தப் படகுகளிலேயே அழைத்துக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர்.
சிங்கள மீனவர்கள் வந்த படகுகள் மரியரோசா, மிஸ்புகா, அமுதா புத்தா, நீல்மெரின், ரசீமி, சுனிடீஸ் மரீன் மற்றும் மகா குருஜி ஆகிய ஆறும் இன்று காலை 5 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. 28 சிங்கள மீனவர்களையும் கடலோர காவல்படையினர் இன்று தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications