வைரமுத்துவின் கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ள கவிஞர் வைரமுத்துவுக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவிஞர் வைரமுத்துவுக்குச் சொந்தமான பொன்மணி மாளிகை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், சிவன் கோவில் 6வது குறுக்குத் தெருவில் உள்ளது.
திருவல்லிக்கேணியை சேர்ந்த சத்தியநாராயணா - லஷ்மி தம்பதியினரின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை 9.50 மணியளவில் திருமண மண்டபத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
போனை, எலக்ட்ரீஷியன் முருகேசன் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் போனில் பேசிய நபர், திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் பதட்டமடைந்த எலக்ட்ரீஷியன் முருகேசன் திருமண மண்டப மேலாளர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோடம்பாக்கம் போலீசில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரவிக்குமார் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலு, சப் இன்ஸ்பெக்டர் சேது பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை மோப்ப நாய் சகிதம் திருமண மண்டபத்துக்கு வந்தனர்.
திருமண மண்டபம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவுக் கூடம், மொட்டை மாடி ஆகிய அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இந்த சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications