இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனம் - ராமேஸ்வரம் மீனவர் காயம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை மீண்டும் ஒரு வெறித்தன தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயமடைந்தார்.
தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது குருவிகளைச் சுடுவது போல கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவது இலங்கை கடற்படையின் பொழுதுபோக்காகி விட்டது. இதனால் வருடந்தோறும் சில மீனவர்கள் உயிரிழந்து வரும் கொடுமை தொடர்கதையாகி விட்டது.
சமீபத்தில்தான் சந்தியாகு என்ற ராமேஸ்வரம் மீனவர் இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதலுக்குப் பலியானார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளில் சென்றனர். இந்த நிலையில் காலை பத்தரை மணியளவில் திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள், மென்டோன் என்பவரின் படகை நிறுத்தினர். அந்தப் படகில் பாண்டி, சந்திரன், மென்டோனின் சகோதரர் ஆன்ட்ரன், கண்ணுச்சாமி ஆகியோர் இருந்தனர். பின்னர் அந்தப் படகை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் ஆன்ட்ரன் கண், கன்னம், கை, கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையில் விழுந்தார் ஆன்ட்ரன். பாண்டிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இலங்கை படையினர் சென்று விட்டனர்.
அதன் பின்னர் தமிழக மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பினர். துப்பாக்கிச் சூடு தகவலை செல்போன் மூலம் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவிக்கவே அனைத்து மீனவர்களும் ராமேஸ்வரம் கரையில் திரண்டு விட்டனர். பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது.
காயமடைந்த ஆன்ட்ரன் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படையின் இந்த வெறித்தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications