மரணமடைந்த பாஜக எம்எல்ஏ மனைவியின் நண்பர் கைது
கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரகுபதிபட். இவரது மனைவி பத்மப்ரியா. சமீபத்தில் இவர் காணாமல் போனார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள வீட்டில் அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
பத்மப்ரியாவை அவரது பால்ய கால நண்பரானஅதுல்ராவ் தான் கடத்தியதாக பத்மப்ரியா மற்றும் ரகுபதி பட்டின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மங்களூரில், அதுல் ராவை போலீஸார் திடீரென கைது செய்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்று அதுல் ராவை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்மப்ரியா மரணம் குறித்து அதுல் ராவ் போலீஸாரிடம் பரபரப்பு தகவல்களைத் தெரிவித்துள்ளார். ரகுபதி பட்டுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வருகிறது. இதுகுறித்து பத்மப்ரியாவுக்குத் தெரியவந்தது.
இதை என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். டெல்லிக்கு வந்து சில நாட்கள் இருக்குமாறு கூறி அழைத்துச் சென்றேன். ஆனால் நாங்கள் டெல்லிக்குப் போன பின்னர் நான், பத்மப்ரியாவை கடத்திச் சென்று விட்டதாக பத்திரிகைகள், டிவிகளில் செய்தி வெளியானது. இதைக் கேள்விப்பட்டு பத்மப்ரியா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
குடும்பக் கெளரவம் கெட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார். இதனால்தான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார் அதுல் ராவ்.
தனக்கும், பத்மப்ரியாவுக்கும் இடையே எந்தத் தவறான உறவும் இல்லை என்றும் அதுல், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications