உயர்ந்தது 'ரெபா ரேட்', 'சி.ஆர்.ஆர்': வங்கி கடன் வட்டியும் உயரும்

முதல் கட்டமாக தன்னிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டியை (Repo rate-ரெபோ ரேட்) 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அதே போல வங்கிகள், ரிசர்வ் வங்கியில் போட்டு வைத்திருக்க வேண்டிய பண கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்-cash reserve ratio) 0.50 புள்ளிகள் அளவுக்கு உயர்த்திவிட்டது. (இந்த உயர்வு தலா 0.25 புள்ளிகள் என்று இரு கட்டமாக அமலாகிறது).
இதன்மூலம் வங்கிகள் வசம் உள்ள நிதி புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்திவிட்டது. இதன் காரணமாக தாங்கள் தந்துள்ள-தரவுள்ள கடன்கள் (லோன்கள்) மீதான வட்டியை வங்கிகள் உயர்த்தப் போகின்றன.
இதனால், வங்கிக் கடன்கள் வட்டி உயர்வதோடு, இனி எளிதாக கடன்களும் கிடைக்காது. இதன்மூலம் சந்தையில் பணத்தின் புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.
இப்போதைய இந்த ரெபோ ரேட், சிஆர்ஆர் விகித உயர்வு நடவடிக்கையால் இந்திய சந்தையிலிருந்து ரூ. 20,000 கோடி அளவுக்கு பணம் உறிஞ்சப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் போய் முடங்கும்.
பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டால் பண வீக்கம் குறையும்.
(பணவீக்கம் என்பது சந்தையில் பணத்தின் அளவு அதிகமாகவும், அதற்கு ஈடான பொருட்களி்ன் அளவும், சப்ளையும் குறைவாகவும் இருப்பது தான்)
இதுவரை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் 8.0 சதவீத வட்டிக்கு கடனை வாங்கி அதை நமக்கு கார், பைக், வீடு வாங்கவும், பர்சனல் லோனாகவும் தந்து வந்தன. இப்போது இந்த வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் வங்கிகளே அதிக வட்டிக்குத் தான் கடன் வாங்கப் போகின்றன.
இந்த வட்டி உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் வங்கிகள் கட்டிவிடும். இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
ஏற்கனவே வட்டி விகித அதிகரிப்பால் வீடுகள், கார், பைக், வாங்குவோரின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தேக்கத்தில் உள்ளன.
இப்போதைய உயர்வு இந்த தேக்கத்தை இன்னும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த சிஆர்ஆர் உயர்வு முதல் கட்டமாகத் தான் 8.25ல் இருந்து 8.50 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 0.25 புள்ளிகள் உயர்த்தப்படவுள்ளது. இதனால் வங்கிகளின் வட்டி விகிதம் விரைவில் இரண்டாவது முறையாக மீண்டும் உயரும்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications