விலைவாசி உயர்வு விஷம்!-ஜனநாயக மாதர் சங்கம் விளாசல்!!
நாகை: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியது போல் விலைவாசி உயர்வு கசப்பு மருந்து அல்ல, அது ஒரு விஷம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் வாசுகி கருத்து தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 12 வது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் வாசுகி பேசுகையில், மேட்டூரில் தண்ணீர் திறந்து நாகை வந்து விட்டாலும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்று பலர் சொன்னாலும், சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களில் தீண்டாமை கொடுமை இன்றளவும் நிலவிவருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் போதுமான அளவு டாக்டர்கள் இல்லை. எனவே இப் பிரச்சனைக்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
பிரதமர் எப்போதும் ஜார்ஜ் புஷ் -சையும் அணு சக்தி ஒப்பந்தத்தையும் மட்டுமே நினைத்துக் கொண்டு உள்ளார். இதனால் அவருக்கு பசி இல்லை, தூக்கம் இல்லை. தேசத்திற்கும் மக்களுக்கும் நன்மை செய்யாத அந்த ஒப்பந்தத்தை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டு உள்ளார். அவருக்கு பசி ஒரு பிரச்சினை இல்லை.
நாடு வளர வளர விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் இது கசப்பு மருந்து என்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் இது கசப்பு மருந்து அல்ல. அது ஒரு விஷம் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமே தெரியும்.
தடுப்பு ஊசி தயாரிக்கும் மூன்று நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ள மத்திய அமைச்சர் அன்புமணி, தனியாரிடம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அப்படி செய்வது ஆபத்தானது என்றார் வாசுகி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications