எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வராது-டி.ஆர்
கோவை: தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் இனி மேல் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் இதுவரை 19 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அரசியல் நிலவரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மின்சார தட்டுப்பாடு, போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது கசப்புணர்வு கொண்டுள்ளனர்.
மக்களுக்கு இலவச டி.வி. தருவதாக சொல்கிறார்கள். ஆனால் அது மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. அப்படியே சேர்ந்தாலும் அந்த டி.வி.க்கள் வெடிக்கின்றன. இது தான் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. திட்டத்தின் லட்சனம்.
காங்கிரஸ் போன்று எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் இனி மேல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது.
ஆன்லைன் வர்த்தகத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் எதுவும் இல்லை. ஆனால் பண முதலைகளுக்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தான் லாபம்.
காங்கிரசை அடியோடு அழிப்பதற்கு அவதாரம் எடுத்தவர் தான் ப.சிதம்பரம் என்றார் ராஜேந்தர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications