சாதாரண பெட்ரோல் விநியோகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சாதாரண பெட்ரோல், டீசல்விநியோகம் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய பெட்ரோலியத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நகரிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை நின்று பல நாட்களாகி விட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை நிறுத்தி விட்டு விலை உயர்ந்த பிரீமியர், பவர் வகை பெட்ரோல், டீசல் விற்பனை நடப்பதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல்
செய்தார்.
அதில், மக்கள் நலனைக் கருத்திக்கொள்ளாமல் லாப நோக்கில் மத்திய அரசு இப்படி விலை உயர்ந்த பெட்ரோல், டீசலை விற்கிறது. இதைத் தடுத்து, சாதாரண பெட்ரோல், டீசலை அதிக அளவில் விற்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் இதுகுறித்து ஜூலை 4ம்தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய பெட்ரோலியத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications