இன்று முதல் மதுரை-செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை-செங்கோட்டை இடையே இன்று முதல் புதிய பாசஞ்சர் ரயில் விடப்படுகிறது.

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையை ரயில்வே இணை அமைச்சர் வேலு வெளியிட்டார். அதில் பல ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சில புதிய ரயில்கள் இடம் பெற்றுள்ளன. சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணைப்படி, மதுரை-செங்கோட்டை தினசரி பயணிகள் ரயிலும், ஷோரனூர்-நீலாம்பூர் ரோடு தினசரி பயணிகள் ரயிலும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. மதுரை-செங்கோட்டை ரயில் மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 10.45 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி வழியாக செல்லும். இதுபோல முற்பகல் 11.25 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்கிறது.

இதேபோல, சென்னை எழும்பூர்- சேலம் தினசரி விரைவு ரயில் இயக்கப்படும். நெல்லை- திருச்செந்தூர் தினசரி பயணிகள் ரயில், கயா- சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில்,

பெங்களூர் யஸ்வந்பூர்- கொச்சுவெளி ஏழைகள் ரதம் விரைவு ரயில் மற்றும் யஸ்வந்பூர்- புதுச்சேரி ஏழைகள் ரதம் விரைவு ரயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.

திருவனந்தபுரம்- ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜதானி விரைவு ரயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.

6 ரயில்களின் வேகம் 15 நிமிடம் முதல் 55 நிமிடங்கள் வரை அதிகரிக்கப்படுகிறது. எர்ணாகுளம்- நிஜாமுதீன் மங்களா லக்ஷதீப் விரைவு ரயில் (15 நிமிடம்), சண்டிகார்- கொச்சுவெளி கேரளா சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (45 நிமிடம்), சென்னை சென்ட்ரல்- கோவை வாராந்திர விரைவு ரயில் (15 நிமிடம்),

திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயில் (30 நிமிடம்), கோவா (வாஸ்கோடகாமா)-சென்னை சென்டிரல் விரைவு ரயில் (55 நிமிடம்), ஹூப்ளி-சென்னை சென்டிரல் விரைவு ரயில் (55 நிமிடம்) ஆகியவற்றின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் அகல பாதையில் இன்னும் ஆய்வுப் பணிகூட முடியவில்லையே என்ற கேள்விக்கு அமைச்சர் வேலு பதிலளிக்கையில், எந்தப் பணியையும் வேண்டுமென்று தாமதப்படுத்தவில்லை. தெற்கு ரயில்வேயில் ஒரேயொரு முதன்மை பாதுகாப்பு ஆணையர்தான் இருக்கிறார். அகல பாதை ஒவ்வொன்றாக அவர் ஆய்வு செய்து வருகிறார்.

நெல்லை-திருச்செந்தூர், வேலூர்-காட்பாடி, திருவாரூர்-நாகூர், எண்ணூர்-கொருக்குப்பேட்டை, கொடைரோடு-திண்டுக்கல் ஆகிய 5 அகல பாதை பணிகள் முடிந்து ஆய்வுக்கு தயாராக உள்ளன. இதில் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்படும். நிலுவையில் இருந்த நெல்லை-தென்காசி, செங்கோட்டை-புனலூர் அகல பாதை பணிகள் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன என்றார்.

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என்றும் வேலு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+