பந்து வீச்சாளர் கோனியால் ஆபத்து-தாய் பரபரப்பு புகார்

சண்டிகரைச் ேசர்ந்தவர் கோனி. இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தனது அபாரமான பந்து வீச்சால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கோனி மீது அவரது தாயார் பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோனியின் தாயார் மொகீந்தர் கெளர் மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோனி அவரது மனைவியின் உறவினர்கள் தூண்டுதலால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்படும் முன் கோனியுடன் அவரது மனைவியின் உறவினர்கள் வந்து என்னை மிரட்டினர்.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்த கோனி, எனது பொருட்களை எடுத்துச் சென்றதுடன் என்னை தாக்கவும் முயன்றார்.
கோனியின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர் மீது போலீசில் புகார் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெளரின் புகார்கள் பொய்யானவை என்று கோனியின் மனைவி மறுத்துள்ளார். இதுகுறித்து கோனி இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications