6ம் தேதி பிரதமர் ஜப்பான் பயணம்-அன்றே இடதுசாரிகள் ஆதரவு வாபஸ்?

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் இறுதி கெடு விதித்துள்ளன.
வரும் 7ம் தேதி ஜப்பானில் நடக்கும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக 6ம் தேதி அவர் ஜப்பான் புறப்படுகிறார்.
அணு ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் (IAEA) பேச நான் அனுமதிக்கப்பட்டால் தான் ஜி-8 மாநாட்டில் பங்கேற்பேன் என பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜி-8 என்பது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, ரஷ்யாவை உள்ளடக்கிய பணக்கார நாடுகளின் அமைப்பு. இந்த அமைப்பில் சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக (observers) உள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், சர்வதேச அணு சக்திக் கழகத்தின் தலைவர் ஆகியோரும் இதில் பங்கேற்பர்.
ஜப்பானில் நடக்கும் இந்த அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் புஷ், IAEA தலைவர் முகம்மத் அல் பாரடாய் ஆகியோருடன் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில் தான் ஜி-8 மாநாட்டுக்கே பிரதமர் போகக் கூடாது என இடதுசாரிகள் கூறியுள்ளனர். ஜி-8க்குப் போய் புஷ்-பாரடாயுடன் பேசிவிட்டு வந்தால் அடுத்ததாக IAEAவுடனான பேச்சை இந்தியா தொடங்கும், அதைத் தொடர்ந்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என இடதுசாரிகள் கருதுகின்றன.
(மேலும் ஐஏஇஏவுடன் பேச்சு நடத்த அதிகாரிகள் குழு ஒன்றை வரும் 4ம் தேதி வியன்னாவுக்கு அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது)
இந் நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஏற்கவே மாட்டோம். நான் ஐஏஇஏவுடன் பேச அனுமதிக்கப்பட்டால் தான் ஜி-8 மாநாட்டுக்கே போவேன் என்று பிரதமர் கூறியிருந்தார். இப்போது அவர் இந்த மாநாட்டு்க்கு போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது தெளிவாகிவிட்டது.
மேலும் ஐஏஇஏவுடன் பேச குழுவை அனுப்பவும் முடிவு செய்துவிட்டனர். இதனால் இனியும் இவர்களை ஆதரிக்க முடியாது. ஆதரவை வாபஸ் பெறுவது தான் ஒரே வழி. ஆதரவை எப்போது வாபஸ் பெறுவது என்பது குறித்து வரும் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூடும் இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்துவிடுவோம் என்றார்.
இதன்மூலம் ஆதரவை வாபஸ் பெற இடதுசாரிக் கட்சிகள் 3 நாட்கள் கெடு விதித்துள்ளன. அதற்குள் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே ஆதரவு தொடரும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
பிரதமர் 6ம் தேதி ஜப்பானுக்கு விமானம் ஏறியவுடன் ஆதரவு வாபஸ் அறிவிப்பை இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டுவிடுவர் எனத் தெரிகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications