3 நாகை மீனவர்கள் 3 மாயம்-ஹெலிகாப்டர் மூலம் தேடுதல்
நாகை: மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் மூன்று பேர் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்று நாகை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (32). அதே பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (40). ராமையன் (58).
இவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 27 ம் தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.
இதனால் அக்கரைப்பேட்டை மக்கள் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் காணமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மீனவர்கள் காணமல் போனது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 விசை படகுகள் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கடலோர காவல் படைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஹெலிகாப்டரில் அவர்களை தேடும் பணி தொடங்கப்படும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications