நாளை பி.இ கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் (கவுன்சிலிங்) நாளை சென்னையில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் நடைபெறும்.
தமிழ்நாட்டில் 278 என்ஜீனியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 124 இடங்கள் உள்ளன. இதில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும் 35 சதவீத இடங்கள் தனியார் கல்லூரிகளின் இட ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும்.
அரசு இட ஒதுக்கீட்டில் 69 ஆயிரத்து 731 மாணவ-மாணவிகளுக்கு இடம் கிடைக்கும். இது தவிர இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகளின் இடங்களும் அரசு இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட உள்ளன.
தனியார் இட ஒதுக்கீட்டில் படிக்க ஆண்டு கட்டணம் ரூ.62 ஆயிரத்து 500 என்றும், அரசு ஒதுக்கீட்டில் இடம் பெறுபவர்களுக்கான கட்டணம் ரூ.32 ஆயிரத்து 500 என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
அரசு இட ஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் பெறுவதற்காக 1 லட்சத்து 27 ஆயிரத்து 299 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 875 மனுக்கள் தகுதியாவை என்று அறி விக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது.
நாளை, விளையாட்டு துறைக்கான சிறப்பு இட ஒதுக்கீடு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. மொத்தம் 100 இடங்கள் இதில் நிரப்பப்படவுள்ளன. இதில் கலந்து கொள்ள வருமாறு 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தொழிற் கல்வி பிரிவு மாணவ, மாணவியருக்கு 4-ந்தேதி முதல் 8-ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
9-ந்தேதி வெளி மாநில மாணவ-மாணவிகளுக்கும் 10-ந்தேதி ஊனமுற்றோருக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கான என்ஜீனியரிங் கவுன்சிலிங் 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 30-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே கவுன்சிலிங் நடைபெறும்.
கவுன்சிலிங்குக்கான முன்னேற்பாடுகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டார். அப்போது முதல் கட்ட கவுன்சிலிங்குக்காக வந்திருந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கவுன்சிலிங்குக்காக சென்னை வரும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் பஸ் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications