பெட்ரோல் பஞ்சம்: பங்க் முன்பு பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நிலவும் பெட்ரோல் பஞ்சத்தைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பாஜக பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மகளிர் அணி துணை தலைவி லலிதா சுபாஷ், இளைஞர் அணி துணைத் தலைவர் ரமேஷ், தி.நகர் வேதா, மாணவர் அணி செயலாளர் சதீஷ், மாவட்ட தலைவர் பால்சிங் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், நேற்று முதல் டீசல், பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் மரண அவஸ்தை பட்டு வருகிறார்கள். இது பற்றி மத்திய, மாநில அரசுகள் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையை கடுமையான அளவுக்கு உயர்த்தினார்கள். இப்போது பிரிமியம் பெட்ரோல், பிரிமியம் டீசல் என்ற பெயரில் மேலும் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
சாதாரண பெட்ரோல், டீசல் தாராளமாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்வதா என்று போலீசாருடன் பா.ஜனதா வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications