மீண்டும் பேட்டி?- வீரபாண்டிக்கு பாமக சவால்!
சேலம்: நாங்கள் எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தாயார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்ய தயாரா என பாமக எம்எல்ஏகள் காவேரி, தமிழரசு ஆகியோர் என சவால் விட்டுள்ளனர்.
பாமகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் காவேரி, தமிழரசு ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பாமக குறித்தும், டாக்டர் ராமதாஸ் குறித்தும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இழிவாக பேசி வருகிறார். இது வருந்ததக்கது.
திமுக தயவில் நாங்கள் வெற்றி பெற்றதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். அது தவறு. எங்கள் உழைப்பால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம்.
நாங்கள் எங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தாயார். அதே போன்று வீரபாண்டி அமைச்சர் ஆறுமுகம் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க தயாரா.
மக்கள் செல்வாக்கு உள்ளதாக கூறப்படும் வீரபாண்டி ஆறுமுகம், அவர் சொந்த தொகுதியை விட்டு விட்டு, பாமக செல்வாக்கு பெற்ற சேலம் 2 வது தொகுதியில் ஏன் போட்டியிட வேண்டும்.
வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் வெறும் 900 ஒட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். இதை எப்படி மக்கள் செல்வாக்கு என்று கூற முடியும்.
கல்குவாரி முதல் மணல் குவாரி வரை அமைச்சரின் கை ஒங்கியுள்ளது. அது மட்டும் அல்ல, ஒமலூர் அரசு மருத்துவ மனை திறப்பு விழாவில் கூட அரசியல் விளையாடியது. நீதி மன்றம் தலையிட்ட பின்பே திறப்பு விழாவே நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications