எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் ஓய்வு பெற்றார்
டெல்லி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குநராகப் பணியாற்றி வந்த டாக்டர் வேணுகோபால் நேற்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கும், டாக்டர் வேணுகோபாலுக்கும் இடையே கடும் பனிப் போர் நடந்தது. மருத்துவ உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டார் என இவர் மீது அன்புமணி குற்றம் சாட்டினார்.
மேலும் டாக்டர் வேணுகோபாலை பணியிலிருந்து அகற்ற சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. இதையடுத்து மே 8ம் தேதியன்று மீண்டும் எய்ம்ஸ் இயக்குநராகப் பணியில் அமர்ந்தார் வேணுகோபால்.
தற்போது, 66 வயதானதால் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் வேணுகோபால். இதையடுத்து டி.டி.டோக்ரா புதிய இயக்குநராக பதவியேற்கிறார்.
இதனிடையே, வேணுகோபாலுக்கு மேலும் 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
மீரா மிஸ்ரா என்பவர் அந்த மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், இதய நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேணுகோபால்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சை முடிவதற்குள் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனால் எனது மகனின் சிகிச்சை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, அவர் 6 மாதம் பணியில் நீட்டிக்க உத்தரவிட்டு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிஸ்தானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஒரு நோயாளிக்காக இயக்குநர் வேணுகோபாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
ஓய்வால் வருத்தமில்லை: வேணுகோபால்
இந் நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதில் எந்தவித வருத்தமும் இல்லை என்று டாக்டர் வேணுகோபால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பதவி விலகுவதில் எந்த வருத்தமும் இல்லை. மீண்டும் ஒரு முறை பிறந்தால், எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற விரும்புகிறேன். வாழ்நாளில் 49 ஆண்டுகள் இங்கு பணியாற்றியுள்ளேன்.
என் பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெறுவதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிறுவனத்தில் பணியாற்றியதில் எனக்கு திருப்தியே. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் சிறந்த நிறுவனமாகியுள்ளது.
நான் மறுபடியும் பிறந்தால், இங்குவந்து பணியாற்ற விரும்புகிறேன். ஓய்வு பெற்ற நான், இனி, ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அக்கறை காட்டுவேன். மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவேன் என்றார் வேணுகோபால்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications