அணு ஒப்பந்தம் நாட்டை பாதிக்காது: பிரதமர் அலுவலகம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சியின் கோரிக்கையை ஏற்று இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ஒருஅறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நாட்டின் பாதுகாப்புத் திட்டங்களை இந்த ஒப்பந்தம் எந்தவகையிலும் பாதிக்காது.
அணு குண்டு சோதனை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் இடதுசாரிகள்:
இதற்கிடையே, மன்மோகன் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை எப்போது வாபஸ் பெறுவது என்பதில் இடதுசாரிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டுக்குப் போனால் ஆதரவை வாபஸ் பெறலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். இதே முடிவைத்தான் அக்கட்சியின் பொலிட்பீரோவும் எடுத்துள்ளது.
ஆனால் மன்மோகன் சிங் அவரது பாதையில் போக முடிவு செய்து விட்ட பிறகு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பர்தான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பர்தன் கூறுகையில், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அந்தக் கோணத்தில்தான் உள்ளது. எனவே அவர்கள் ஜப்பான் போகும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. அதுகுறித்து 4ம் தேதி முடிவு செய்யப்படும் என்றார் பர்தன்.
முன்னதாக நேற்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவை பர்தன் நேற்று சந்தித்தார். கெளடவிடம் 2 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடுவும் பர்தனை சந்தித்துப் பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications