தமிழகத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
சென்னை: நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி நியமனத்தின்போது நீதிமன்றப் பணியாளர்களையும் பரிசீலிக்கும் முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதில், சிவில் நீதிபதி நியமனத்தில், சட்டம் படித்த நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவைக் கைவிட வேண்டும். இந்த முடிவால், வக்கீல்தொழில் பார்த்து வருவோரும், நீதித்துறையும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.
சிவில் நீதிபதி நியமனம் தொடர்பான நீதிபதிகளின் பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளையே அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கமும் கலந்து கொண்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications