மின்சாரம் தாக்கி 2 பெண்கள், தொழிலாளி பலி
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கீழகரம்பட்டி கிராமத்தில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இன்று காலை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வீரமணி (32) என்ற பெண் தொழிலாளர் மின்சார வயரைத் தொட்டு விட்டார். இதையடுத்து அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் துடிதுடித்தார்.
இதைப் பார்த்த அவரது கணவர் மணி (43) வீரமணியைக் காப்பாற்ற ஓடி வந்து அவரைப் பிடித்தார்.அப்போது அவரது உடலுக்கும் மின்சாரம் பரவியது.
இதைப் பார்த்த முத்துலட்சுமி (35) என்ற பெண் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேருமே தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்களை மீட்ட போலீஸார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications