சோயிப் அக்தர் மீதான தடையை சஸ்பெண்ட் செய்து கோர்ட் உத்தரவு
கராச்சி: பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாலர் சோயிப் அக்தருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடையை லாகூர் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் விளையாடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2 ஆண்டு கால புரபேஷன் பீரியடில் நன்னடத்தையுடன் இல்லாததாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சோயிப்அக்தருக்கு 18 மாத தடையை விதித்தது. இதனால் சோயிப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான தடையை நீக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சோயிப் அக்தர். அந்த வழக்ைக விசாரித்த உயர்நீதிமன்றம், தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரைதொடர்ந்து சோயிப் அக்தர் விளையாடலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இருப்பினும் சோயிப்புக்கு விதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த உத்தரவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சட்ட ஆலோசகர் தபசுல் ரிஸ்வி கூறுகையில், சோயிப் அக்தர் மீதான தடை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது அபராதத் தொகை ரத்து செய்யப்பவில்லை. எனவே முதலில் அவர் அபராதத் தொகையை கட்ட வேண்டும். அப்படி செய்தால்தான் மற்றவை குறித்து பரிசீலிக்க முடியும் என்றார்.
கோர்ட் உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சோயிப். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறது. மீண்டும் விளையாடப் போகிறோம் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆட ஆவலாக உள்ளேன்.
அதற்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள கவுன்டி கிளப் அல்லது லீக் அணியில் இணைந்து பயிற்சி பெறவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் சோயிப்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications