பாளை சிறையில் கைதிகள் மோதல்
நெல்லை: பாளை சிறையில் மதுரை-நாகர்கோவில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பாளை உள் சிறையில் 7-வது அறையில் நாகர்கோவில் விசாரணை கைதிகள் ஆறுமுகம், சுடலைமணி, கலீப் உள்பட 5 பேர் உள்ளனர். இதன் பக்கத்து அறையில் மதுரை விசாரணை கைதி வெங்கட் உள்ளார். இந்த நாகர்கோவில் கைதிகளுக்கும் இவருக்கும் இரவில் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கட் தாக்கப்பட்டார். காலையில் சிறையின் அறைகளிலிருந்து கைதிகள் வெளியில் வந்தனர்.
அப்போது வெங்கட் புதுபில்டிங்கில் 8-வது அறையிலிருந்த மதுரையை சேர்ந்த அவரது கூட்டாளிகள் சோமசுந்தரம், விஜயன், சின்னப்பாண்டி, ஷாபி ஆகியோரிடம் தான் தாக்கப்பட்ட விஷயத்தை தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பதிலுக்கு எதிர் கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகத்தை தாக்கினர். அங்கு வந்த ஆறுமுகத்தின் கூட்டாளிகளும் பதிலுக்கு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வார்டன் பாஸ்கரன் இரு கோஷ்டியையும் சமதானப்படுத்தினார். ஆனால் அவரை சோமசுந்தரம் என்ற கைதி கீழே தள்ளி தாக்கினார். இதனையறிந்த அங்கு வந்த 25 வார்டன்கள் இரு கோஷ்டியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
பின்னர் சோமசுந்தரம், விஜயன், சின்னப்பாண்டி, ஷாபி ஆகிய 4 கைதிகளும் வெளிசிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் ஜெயிலர்கள் நிஜாமுதீன், அமிர்தலால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications