காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ரூ. 1.31 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 1.31 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திமுக அரசு பொறுப்பேற்றதும், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ந் தேதியை ""கல்வி வளர்ச்சி நாள்'' என அறிவித்தது.

அன்றைய தினம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி 24.5.2006 அன்று ஆணையிட்டார்.

அதனையொட்டி, கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் அனைத்திலும் மிகச் சிறப்பான முறையில் விழா நடத்தப்பட்டது. வரும் 15.7.2008 அன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடாக 1 கோடியே 7 லட்ச ரூபாய்க்கு அனுமதி அளித்தும்; பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து 24 லட்ச ரூபாய்க்கு அனுமதி அளித்தும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+