காபூல் இந்திய தூதரகம் மீது மனித குண்டு தாக்குதல்-41 பேர் பலி

பலியானவர்களில் 4 பேர் இந்தியர்களாவர்.
காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் வந்த தீவிரவாதி, இந்தியத் தூதரகத்திற்குள் நுழைய முயற்சித்தார்.
ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின.
இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. தூதரகம் உள்ள சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
போலீஸாரும், ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிர்ப் பலி உயரும் என அஞ்சப்படுகிறது.
4 இந்தியர்கள் பலி:
குண்டுவெடிப்பில் தூதரகத்தின் சுற்றுச் சுவர் பலத்த சேதமடைந்தது. இறந்தவர்களில் ஒருவர் தூதரக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்று தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் மேலும் 3 பேரும் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியத் தூதரகதத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தலிபான் அமைப்பு இதை மறுத்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications