ஜெ. திரும்புவது எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னைக்கு எப்போது திரும்புவார் என்பதை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முழுமையான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பு அந்தஸ்துக்கு குறையாத ஒரு போலீஸ் அதிகாரி ஜெயலலிதாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து, அதை 2 வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில், தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பு அதிகாரி துரைகுமார் இதற்காக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவை சந்தித்து பேச அவர் அனுமதி கேட்டிருந்தார். இம்மாதம் 2-ம் தேதி 4 மணி அளவில் கொடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதாவை சந்தித்து பேச அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், பாதுகாப்பு அதிகாரி கொடநாடு சென்று ஜெயலலிதாவை சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டார். ஜெயலலிதாவை அவரது வீட்டில் தான் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கருத்து கேட்டறிய வேண்டும் என்று தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், கடந்த வியாழக்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினார். ஜெயலலிதாவை கொடநாட்டில் சந்தித்து பேச காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் பிறப்பித்த காலக் கெடு முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்தது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணந் வாதிடுகையில்,
கொடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதாவுக்கு அங்கும் பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் உள்ளது. கொடநாடு பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ், கொடநாட்டு எஸ்டேட்டில் காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஜெயலலிதா தங்கி இருக்கும் கொடநாடு எஸ்டேட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அங்கும் பாதுகாப்பை ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஜெயலலிதாவை வீட்டில் நேரடியாக சந்தித்து கருத்து கேட்க வேண்டும் என்று தான் உத்தரவிடப்பட்டது. அதில் கொடநாடு சென்று கருத்து கேட்கும்படி சொல்லவில்லை என்றார்.
அதற்கு நவநீதகிருஷ்ணன், கொடநாட்டிலும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றார்.
அதைக்க கேட்ட நீதிபதி, ஜெயலலிதா எப்போது சென்னை திரும்புவார்? அந்த தகவலை கேட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதில் அரசு தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டி உள்ளது என்றார்.
இதையடுத்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் வாதிடவேண்டி இருப்பதால் காலஅவகாசம் தேவை என்று கோரினார்.
இதையடுத்து புதன்கிழமை வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications