சோம்நாத் பதவி விலக மாட்டார்?
டெல்லி: தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே ஊகச் செய்திகளால் அவரது பதவிக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளதால், சோம்நாத் சாட்டர்ஜியும் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் அல்லது அவரை பதவியிலிருந்து விலக நெருக்கடி தரப்படும் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். நான்தான் இன்னும் சபாநாயகர் என்று மட்டும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் அலுவலகம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எடுக்கவில்லை.
எனவே இதுதொடர்பாக ஊகமாகவோ அல்லது சர்ச்சைக்குரியதாகவோ செய்திகள் வெளியிட்டு, நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். அவரது கடமைகளையும், பணிகளையும் சீரிய முறையில் கவனித்து வருகிறார். அதில்தான் அவரது கவனம் உள்ளது.
தற்போதைய சபாநாயகர் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவர். அது ஒருமனதான தேர்தல் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளும் இணைந்து சபாநாயகரை தேர்ந்தெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தக் கட்சியின் சார்பிலும் வேட்பாளராக அவர் போட்டியிடவில்லை, தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் எந்த அரசியல் கட்சி தொடர்பான விவகாரங்களிலும் சோம்நாத் சாட்டர்ஜி தொடர்பு கொண்டிருக்கவில்லை. அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியிருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சோம்நாத் பதவி விலக மாட்டார் என்றே கருதப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications