பின்னோக்கி 7 கி.மீ. ஓடிய முத்து நகர் எக்ஸ்பிரஸ்!

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல எழும்பூரிலிருந்து கிளம்பியது. நேற்று அதிகாலையில், திருச்சியைத் தாண்டி பூங்கொடி என்ற ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் வந்த போது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரயிலை நிறுத்தி விட்டு அதன் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், கார்டு ஆகியோர் பூங்கொடி ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்து மாற்று என்ஜினை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குத் தகவல் தந்து விட்டு வெளியே வந்தனர். அப்போது நிறுத்தி வைத்த ரயிலைக் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரயில் எங்கே போனது என்று பார்த்தபோது, ரயில் பின்னோக்கி போயிருந்தது தெரிய வந்தது.
ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் பின்னோக்கி நகரத் தொடங்கி கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தொலைவுக்குப் போய் விட்டது. அதாவது திருச்சி அருகே வரை போய் விட்டது. அங்குள்ள மேம்பாலம் ஒன்றின் மீது ரயில் வந்தபோது அது மேடான பகுதி என்பதால் அதற்கு மேல் போகாமல் அப்படியே நின்றுள்ளது.
ரயில் பின்னோக்கி போனது தெரியாமல் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பின்னால் எந்த ரயிலும் வரவில்லை. வந்திருந்தால் பேராபத்து ஏற்பட்டிருக்கும்.
உடனடியாக மாற்று என்ஜின் கொண்டு வந்து மாட்டி, திண்டுக்கல்லுக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழப்பம் காரணமாக அனந்தபுரி, பொதிகை, நெல்லை, பாண்டியன் ஆகிய ரயில்கள் கால தாமதமாகின.
ரயில் பின்னோக்கிச் சென்ற விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications