பிளஸ்டூ மாணவி 3 மாதமாக கற்பழிப்பு-2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பிளஸ் டூ மாணவியை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சுட்டகிரியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு சுவர்ணா (17) என்ற மகள் உள்ளார்.

இவர் அருகில் உள்ள ஊரில் செயல்பட்டு வரும் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த மார்ச் 15 ம் தேதி அன்று பள்ளிக்கு வழக்கம் போல் சென்றார். ஆனால் பள்ளி முடிந்தும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சுவர்ணா கிடைக்கவில்லை. இதையடுத்து மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சுவர்ணா வீடு திரும்பினார். காணமல் போன மகள் கிடைத்த சந்தோசத்தில் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்கள் காணாமல் போனது குறித்து விசாரித்தனர்.

அப்போது, சாம்பல் பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் தான் நின்று இருந்த போது அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பட்டாபி, அவரது நண்பர் ரவி ஆகியோர் கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்து கடந்த மூன்று மாதமாக கட்டயாப்படுத்தி பாலியல் பலாத்தகாரம் செய்ததாக தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த சுவர்ணாவின் பெற்றோர் மீண்டும் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் பட்டாபி, ரவி ஆகியோரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+