விடுதலைப் புலிகளுடன் பேச தயார்: ராஜபக்சே

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீர் பயணமாக பெங்களூர் வந்தார். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ரேணிகுண்டா அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பதிக்கு அவர் சென்றார்.
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்றிரவு வெங்கடாஜலபதியை வழிபட்டார். இலங்கையில் அமைதி திரும்ப அவர் சிறப்பு வழிபாட்டை நடத்தினார்.
ராஜபக்சேவுடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது.
ராஜபக்சேவின் இந்திய பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்கள், ராஜபக்சேவை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ராஜபக்சே பேசுகையில், அமைதிப் பேச்சுக்கு இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
நாட்டில் அமைதிதிரும்ப விடுதலைப் புலிகளுடன் பேச நாங்கள் எப்போதும் தயார்தான். தீர்வு அவர்கள் கையில்தான் உள்ளது. இதுவரை இலங்கையில் நடந்த சண்டைச் சம்பவங்களில் 25 ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு முடிவு வர வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள்தான் முன்வர வேண்டும்.
கடந்த இருபது ஆண்டுகளாகஇனப் போரால் இலங்கையின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்த இலங்கை அரசு தீவிர நடவடிக்ைககளை மேற்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு உலகில் உள்ள எந்த நாடும் ஆதரவு தராது. எனவே இந்தியா விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்யும் என நான் நினைக்கவில்லை.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு எந்த தொந்தரவையும் தரவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீனவர்களைத் தாக்குவது விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன்.
விடுதலைப் புலிகள் பிரச்சினை எப்போது தீரும் என்றகேள்விக்கு இப்போது பதிலளிப்பது கடினம். இருப்பினும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை தடுக்க இலங்கை அரசு அனைத்து நடவடிக்ைககளிலும் ஈடுபட்டு வருகிறது.
சார்க் அமைப்பின் மாநாடுகளில் விடுதலைப் புலிகள் பிரச்சினையை இலங்கை அரசு எழுப்பி வந்திருக்கிறது. கொழும்பில் நடைபெறவுள்ள 15வது சார்க் மாநாட்டிலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என்றார் ராஜபக்சே.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications