அமைச்சர் ராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
ராமநாதபுரம்: பெரம்பலூரில் உள்ள மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா அலுவலகத்தில் வெடி குண்டு வீசப்படும் என மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த மர்ம போனை அடுத்து அவரது அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பாலக்கரையில் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது வெடி குண்டு வீசித் தகர்க்கப்படும் என மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு மர்ம போன் வந்தது.
இதனையடுத்து நேற்று இரவு கரூர் எஸ்பி சண்முகவேல், கரூர் டிஎஸ்பி அரவிந்தன் மற்றும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ஜோசப் சிரில் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் கடுமையாக சோதனையிடப்படுகின்றன. மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு போன் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காடுவெட்டி குரு கைது சூழ்நிலையில், தற்போதுள்ள விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications