ரூ. 100க்கு அரசு கேபிள் டிவி இணைப்பு - தமிழக அரசு
சென்னை: ஜூலை 15ம் தேதி முதல் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நான்கு மாவட்ட தலைநகரங்களில் ஒளிபரப்பைத்தொடங்கும் அரசு கேபிள் டிவியின் இணைப்புக்கு ரூ.100க்கு மிகாமல் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேபிள் டிவி ஆபரேட்டர்களை அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பிரிஜேஷ்வர் சிங் கூறுகையில், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் செயல்பாடு ஜூலை 15ம் தேதி தஞ்சையிலிருந்து தொடங்குகிறது.
இங்குள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து முதலில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மட்டும் முதலில் ஒளிபரப்பு தெரியும். பின்னர் படிப்படியாக அந்த மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
எத்தனை சானல்களை அரசு கேபிள் மூலமாக காட்டுவது என்பதுகுறித்து சனிக்கிழமை முடிவு செய்யப்படவுள்ளது. அப்போது சானல்கள் எத்தனை என்ற அறிவிப்பை தஞ்சையில் அறிவிக்கவுள்ளேன்.
தஞ்சையைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை பகுதிகளில் அரசு கேபிள்டிவி தெரிவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
அரசு கேபிள் டிவி இணைப்பு ரூ. 100 தொகைக்கு வழங்கப்படும். இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications