ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ குர்ஜார் புதுவை ஆளுநராக நியமனம்
புதுச்சேரி: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் குர்ஜார், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் முகுந்த் மித்தி, தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் அந்தமான் துணை நிலை ஆளுநர் பூபீந்தர் சிங், புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி புதிய துணை நிலை ஆளுநராக கோவிந்த்சிங் குர்ஜார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிர அரசியல்வாதி, காங்கிரஸ் கட்சிக்காரர். ராஜஸ்தான் மாநிலம் நாசீர்பாத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
இவரை தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர்களாக உள்ளனர். நவல்கிஷோர் சர்மா குஜராத்திலும், பல்ராம் ஜாக்கர் மத்திய பிரதேசத்திலும், ஷிவ் சரண் மாத்தூர் அஸ்ஸாமிலும், ஜோஷி உத்தரகாண்ட்டிலும் ஆளுநர்களாக உள்ளனர். தற்போது இந்த வரிசையில் குர்ஜார் இணைகிறார்.












Click it and Unblock the Notifications