ஒரு ஓட்டுக்கு ரூ. 25 கோடி, அமைச்சர் பதவி: சமாஜ்வாடி எம்.பி. தகவல்
லக்னோ: காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட ஒரு எம்பிக்கு ரூ.25 கோடி ரூபாயும், மந்திரி பதவியும் அளிக்க காங்கிரஸ் முன் வந்திருப்பதாக சமாஜ்வாடி எம்பி முன்வர் ஹாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில் சமாஜ்வாடி கட்சிதான் மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற காங்கிரசுக்கு இன்னும் 10 முதல் 15 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு இப்போது பெரும் யோக நேரம். எனவே அவர்களைப் பணம் மற்றும் பதவிகள் கொடுத்து வளைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியலில் இத்தகைய குதிரை பேரங்கள் சகஜம்தான் என்றாலும், மீதமுள்ள சில மாதங்களுக்கு அரசைத் தாக்குப்பிடிக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தர முன்வந்துள்ள விலையைக் கேட்டு யாருக்கும் தலை கிறுகிறுத்துப் போகும். அதை சமாஜ்வாடி கட்சியின் அதிருப்தி எம்.பியான முனவர் பாஷா புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
முனவர் பாஷா லக்னோவில் அளித்துள்ள அதிரடி பேட்டி:
அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது. எனவே என்னைப் போன்றவர்களால் அதை ஆதரிக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் விலை கொடுத்து இதர கட்சி எம்பிக்களின் ஆதரவைப் பெற முடிவுசெய்துள்ளது.
நேற்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, ரூ.25 கோடி பணமும் மந்திரி பதவியும் அளித்தால் ஆதரவு தருவீர்களா என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங்குக்கு இப்போது இதுதான் வேலை. அவரதான் எல்லாரையும் பணத்துக்கு வாங்கும் வேலையைச் செய்கிறார். என்னிடம் இதற்கு ஆதாரங்கள் உள்ளன, என்கிறார் முன்வர் பாஷா.
இவரைப் போலவே மேலும் இரு எம்பிக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications