விலக ஜோதிபாசு அறிவுரை - சோம்நாத் இன்று ராஜினாமா?
கொல்கத்தா: லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜிக்கு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து இன்று சோம்நாத் விலகலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டு விட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்ேசர்ந்த லோக்சபா சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜியும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நான் கட்சி சார்பற்றவன் என்று சோம்நாத் கூறி விட்டார். இருப்பினும் அவர் பதவி விலக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து நெருக்குதல் வந்தது. அதேபோல காங்கிரஸ் தரப்பிலிருந்தும் நெருக்குதல் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மூத்த தலைவர் ஜோதிபாசுவை கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சோம்நாத் சாட்டர்ஜி சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த சோம்நாத் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டுச் சென்றார்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, இடதுசாரிகள் தங்களது கருத்ைத ஒருமித்து பிரபதிபலிக்க வேண்டும். எனவே இடதுசாரிகளின் முடிவுக்கேற்ப உங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவதே நல்லது என்று சோம்நாத்துக்கு ஜோதிபாசு அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய சோம்நாத் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று அவர் தனது முடிவை அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications