ராஜபக்சே கொடும்பாவியை எரித்து வக்கீல்கள் போராட்டம்
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் கொடும்பாவிைய அணைக்க விடாமல் வக்கீல்கள், போலீஸாரை தடுத்து நிறுத்தியதால் கொடும்பாவி முழுமையாக எரிந்து சாம்பலானது. அதன் பிறகே வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால், என்.எஸ்.சி. போஸ் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications