மீனவர்கள் ஸ்டிரைக் எதிரொலி: மீன் விலை கிடு கிடு உயர்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களில் மீன் விலை அதிகஅளவில் உயர்ந்துள்ளது.
இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஸ்டிரைக் தொடங்கி இன்றுடன் 10 நாட்களாகிறது.
இதன்காரணமாக முக்கிய மீன் பிடி மையமான ராமேஸ்வரத்தில் மீன் பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமரங்களைக் கொண்டு சில மீனவர்கள் பிடித்து வரும் மீன் போதிய அளவில் இல்லாததால் மீன் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வஞ்சிரம், இறால் உள்ளிட்ட விலை அதிகமான மீன்கள் சுத்தமாக வரத்து இல்லை. இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மார்க்கெட்டுக்கும் போதிய அளவில் மீன் வரத்து இல்லை.
ராமேஸ்வரத்தில் உள்ள ஐந்து மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. ராமேஸ்வரத்தில் மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் மீன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறைந்த அளவிலான மீன்களே விற்பனைக்கு வருவதால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மீனவர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ஜூலை 16ம் தேதி சென்னைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பல்வேறு மீனவர் சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications