சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் ஸ்டிரைக்
சென்னை: போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதைக் கண்டித்து சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
சென்னை நகர போக்குவரத்து சேவையில் ஷேர் ஆட்டோக்களின் பங்கும் கணிசமானது. வழக்கமான ஆட்டோக்களில் போவதைப் போல இல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து செல்வதுதான் ஷேர் ஆட்டோ. ஆனால் பல ஷேர்ஆட்டோக்களில் பத்து பேர் வரை அடைத்துக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இப்படி அதிக அளவில் செல்வதால் பல சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் தங்களிடம் லஞ்சம்கேட்டு போலீஸார் தொல்லை செய்வதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போலீஸாரின் தொல்ைலக்கு முடிவு கட்டக்கோரி இன்று சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களை அதிகம் காண முடியவில்லை.
புதுச்சேரியில் உள்ளதைப் போல ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். போலீஸாரின் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications