மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு-அகாலிதளம்

பாஜக கூட்டணியில் உள்ள இந்தக் கட்சி இத்தனை நாட்களாக தனது முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தது. சீக்கியரான பிரதமர் மன்மோகன் சி்ங்கின் ஆட்சியை கவிழ்க்க சீக்கிய கட்சியான அகாலிதளம் துணை போகக் கூடாது என காங்கிரஸ் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை எதிர்த்தே வாக்களிப்போம் என அக் கட்சியின் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் இன்று அறிவித்துவிட்டார்.
அவர் கூறுகையில், பிரதமர் நல்லவர் தான், சிறந்த நிர்வாகி தான். ஆனால், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி எப்போதும் பஞ்சாபின் நலன்களை புறக்கணித்தே வந்துள்ளது. பஞ்சாபுக்கு காங்கிரஸ் செய்த கெடுதல்களை யாரும் மறந்துவிட முடியாது.
அணு ஒப்பந்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், விலைவாசி உயர்வும் வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்தாடுவதை மத்திய அரசு மறைக்க முடியாது.
பிரதமர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர், நாங்கள் எங்கள் சமூக நலனை எப்போதும் பின் தள்ள மாட்டோம். ஆனால், சிரோமணி அகாலிதளம் ஒரு மதசார்பில்லாத கட்சி. இதனால் பிரதமர் சீக்கியர் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாம் அவரை ஆதரிக்க முடியாது.
எங்களுக்கும் சோனியா காந்திக்கும் இடையிலான அரசியல் உறவு தண்ணீருக்கும் நெருப்புக்கும் இடையிலான உறவு மாதிரி. இதில் கெடுக்கல் வாங்கலுக்கு இடமே இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம். நடுநிலை எல்லாம் வகிக்க மாட்டோம். நடுநிலை வகிப்பது என்பது போரில் இருந்து ஓடுவது மாதிரி தான்.
அணு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒருமித்த கருத்தை எட்டியிருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் ஏதோ குறை இருப்பதால் தான் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர் என்றார் பாதல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications