சமாஜ்வாடி எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
டெல்லி: மத்திய அரசைக் கவிழ்க்க பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி சமாஜ்வாடி கட்சி எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி வரை பணம் தருவதாக பேரம் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பகுஜன் சமாஜ் தனக்கு ரூ. 30 கோடி தர முன் வந்ததாக ஒரு சமாஜ்வாடி எம்பியும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் நிருபர்களிடம் கூறுகையில்,
பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து என்னை ஒழித்து கட்ட முயல்கின்றன. பிரதமராகும் கனவில் இருக்கும் அத்வானி, முதலில் அதற்கான தகுதியை பெற முயற்சிக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக டாக்டர் அப்துல் கலாமை நாங்கள் சந்தித்ததையும் பாஜக விமர்சித்துள்ளது. நம்பிக்கைக்கு உரியவர் யார்?. அப்துல் கலாமா அல்லது பாஜக தலைவர்களா? அப்துல் கலாமை விமர்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் நாறிப் போவார்கள்.
மத்தியில் ஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.பிக்களுக்கு ரூ.25 கோடி விலை பேசுவதாக இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியிருக்கிறார். அவர் ஒரு மரியாதைக்குரிய தலைவர். எனவே ஆதாரப்பூர்வமாகத்தான் அவர் குற்றச்சாட்டை கூற வேண்டும்.
சமாஜ்வாடியை சேர்ந்த யாராவது அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக பரதன் நிரூபித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ்-சமாஜ்வாடி எம்.பிக்களைத்தான் பேரம் பேசி வருகின்றனர்.
எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பிக்கு ரூ.30 கோடி தருவதாக பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்காவிட்டால், பல்வேறு வழக்குகளை தொடர்ந்து சிறையில் அடைத்து விடுவதாக சமாஜ்வாடி எம்.பிக்களை மாயாவதி மிரட்டுகிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதற்காக, சில முக்கிய அமைச்சர் பதவிகளை சமாஜ்வாடி கட்சிக்கு தர வேண்டும் என்றோ, தற்போது பதவியில் இருக்கும் சில முக்கிய அமைச்சர்களை நீக்க வேண்டும் என்றோ நாங்கள் எந்த நிபந்தனைகளையும் காங்கிரசுக்கு விதிக்கவில்லை. இவையெல்லாம் எங்களுக்கு எதிரான சக்திகள் பரப்பும் தகவல்கள் என்றார்.
ரூ. 30 கோடி தர வந்த மாயாவதி: எம்பி
இதற்கிடையே சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பியான அக்சய் பிரதாப் சிங் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க எனக்கு ரூ.30 கோடி தருவதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் என்னிடம் பேரம் பேசினர் என்று கூறியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications