நக்சல்கள்-போலீசாருக்கு எஸ்டிஎப் சிறப்பு பயிற்சி
கோவை: தமிழகத்தில் நக்சல்களை ஒடுக்கவும் அவர்களது மிரட்டலை எதி்ர்கொள்ளவும் போலீசாருக்கு, அதிரடிப் படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீசாருக்கு ஈரோடு சத்தியமங்கலம் வனப் பகுதியில் கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 1,000 போலீசாருக்கு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏ.கே 47 மற்றும் நவீன ரக துப்பாக்கிகளை கையாளுவது, காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை டிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான அதிரடிப் படையினர் அளித்து வருகின்றனர்.
இங்கு பயி்ற்சி முடித்த பின் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் அடுத்த கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைகளை கண்காணிக்க கேமரா:
இதற்கிடையே சென்னையில் இருந்தவாரே தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை கேமரா மூலம் கண்காணிக்கும் திட்டத்தை அரசு அமலாக்கவுள்ளது.
முதல் கட்டமாக வேலூர் சிறையில் ரூ. 80 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. நடராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய சிறைகளில் தண்டனை குற்றவாளிகள், பயங்கரவாதிகள், போதைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாக புகார்கள் வருகின்றன.
சிறைக் காவலர்கள் உதவியுடன் சிறைக்குள் போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதைத் தடுக்க இந்த கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டது.
வேலூர் சிறையில் உள்ள கேமராக்களை சென்னை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறையில் உள்ள கட்டுப்பாடு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.
அடுத்து சென்னை புழல் மத்திய சிறை-1, மத்திய சிறை-2, பாளையங்கோட்டை, கோவை, சேலம், வேலூர், மதுரை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, புழல் மத்திய சிறை-3 ஆகியவற்றிலும் இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications