ரூ.2 கோடி மோசடி: தேவர் பேரவை பிரமுகர் கைது
நெல்லை: ஆந்திர மாநில தொழிலதிபரை ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில் தேவர் பேரவை இளைஞர் அணித் தலைவர் எஸ்ஆர் தேவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்தவர் வெங்டேஷ்வர ரெட்டி. தொழிலதிபரான இவர் தாத்தரி குரூப் ஆப் கம்பெனியை நடத்தி வருகிறார்.
தனது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக வெங்கடேஷ்வர ரெட்டி ரூ.100 கோடி கடன் கேட்டு நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தை சேர்ந்த சேதுராமபாண்டியன், காரைக்குடி எஸ்ஆர் தேவர் ஆகியோரை அணுகினார்.
பின்னர் அதற்கு கமிஷனாக ரூ.2 கோடி கொடுத்தார். ஆனால் ரூ.100 கோடி கடன் கிடைக்காததால் வெங்கடேஷ்வர ரெட்டி தான் கொடுத்த ரூ.2 கோடியை திருப்பி கேட்டார்.
அவர்கள் கொடுக்காததால் இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து மாநகர குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி சேதுராமபாண்டியன், அவரது உதவியாளர் ராஜேஷ், பேரன் மூர்த்தி, எஸ்ஆர் தேவர், ராமகிருஷ்ணன், ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் எஸ்ஆர் தேவரை போலீசார் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பிடித்து விசாரித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று அவரை கைது செய்தனர்.
இதையடுத்து எஸ்ஆர் தேவரை போலீசார் நெல்லை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். இவர் தேவர் பேரவை இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications